somewhereINmyVISION

Saturday, August 07, 2010

Music of Life

ஏழு ஸ்வ‌ர‌ங்க‌ளுக்குள் எத்தனை பாட‌ல்
இத‌ய‌ச் சுர‌ங்க‌த்துள் எத்த‌னை கேள்வி

ஏழு ஸ்வ‌ர‌ங்க‌ளுக்குள் எத்தனை பாட‌ல்
இத‌ய‌ச் சுர‌ங்க‌த்துள் எத்த‌னை கேள்வி
காணும் ம‌னித‌ருக்குள் எத்த‌னை ச‌ல‌ன‌ம்
வெறும் க‌ற்ப‌னை ச‌ந்தோஷ‌த்தில் அவ‌ன‌து க‌வ‌ன‌ம்

காலை எழுந்த‌வுட‌ன் நாளைய‌ கேள்வி
அது கையில் கிடைத்த‌ பின்னும் துடிக்குது ஆவி
ஏன் என்ற‌ கேள்வி ஒன்று என்றைக்கும் த‌ங்கும்
ம‌னித‌ன் இன்ப‌ துன்ப‌ம் எதிலும் கேள்விதான் மிஞ்சும்
ஏழு ஸ்வ‌ர‌ங்க‌ளுக்குள் எத்தனை பாட‌ல்

எத‌ற்காக‌ நீ அழுதால் இய‌ற்கையில் ந‌ட‌க்கும்
நீ எத‌ற்காக‌ உண‌வு உண்ண‌ இப்ப‌டி ந‌ட‌க்கும்
ந‌ம‌க்கென்று பூமியிலே க‌ட‌மைக‌ள் உண்டு
அதை ந‌ம‌க்காக‌ ந‌ம் கையால் செய்வ‌து ந‌ன்று
ஏழு ஸ்வ‌ர‌ங்க‌ளுக்குள் எத்தனை பாட‌ல்

ஆர‌ம்ப‌த்தில் பிற‌ப்பும் உன் கையில் இல்லை
என்றும் அடுத்த‌டுத்த‌ ந‌ட‌ப்பும் உன் கையில் இல்லை
பாதை வ‌குத்த‌ பின்பு ப‌ய‌ந்தென்ன‌ லாப‌ம்
அதில் ப‌ய‌ண‌ம் ந‌ட‌த்திவிடு ம‌றைந்திடும் பாவ‌ம்
ஏழு ஸ்வ‌ர‌ங்க‌ளுக்குள் எத்தனை பாட‌ல்

நாளை பொழுது என்றும் ந‌ம‌க்கென‌ வாழ்க‌
அதை ந‌ட‌த்த‌ ஒருவ‌ன் உண்டு, கோவிலில் காண்க‌
வேலை பிற‌க்கும் என்று ந‌ம்பிக்கை கொள்க‌
எந்த‌ வேத‌னையும் மாறும் மேக‌த்தை போல‌
ஏழு ஸ்வ‌ர‌ங்க‌ளுக்குள் எத்தனை பாட‌ல்

1 Comments:

Anonymous Anonymous said...

dahrshini..its roger :)

Tuesday, August 24, 2010 1:11:00 AM  

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home