எத்தனை மாதங்களாகியும்
உன் மேல் எனக்கு பிடித்த பித்து இன்னும் மறையவில்லையே
என்னென்ன மாயமோ உன் குறலில்
நான் மயங்கியே என்னை மறக்க
ஏன் எனக்குள் நுழைந்தாய்
உன்னையே நினைத்து வாழவா?
ஏனோ எனக்குள் புகுந்தாய்
உன்னையே நான் நினைத்து தான் சாகவா?
திறந்து காட்டடா உன் மனதை
உனக்குள் நான் உள்ளேனா
துறந்துவிட்டெனடா என் உடலை
உன் குறலுக்கே என்னை அற்பனிக்கிறேன்.
காதலிக்கிறேன்...
உன்னை!
உறவுகள் தொடர்கதை
உணர்வுகள் சிறுகதை
ஒரு கதை என்றும் முடியலாம்
முடிவிலும் ஒன்று தொடரலாம்
இனி எல்லாம் சுகமே
உன் நெஞ்சிலே பாரம்
உனக்காகவே நானும்
சுமை தாங்கியாய் தாங்குவேன்
உன் கண்களின் ஓரம்
எதற்காகவோ ஈரம்
கண்ணீரை நான் மாற்றுவேன்
வேதனை தீரலாம்
வெறும் பனி விலகலாம்
வெண்மேகமே
புது அழகிலே நாளும் இணையலாம்
வாழ்வென்பதோ கீதம்
வளர்கின்றதோ நாதம்
நாளொன்றிலும் ஆனந்தம்
நீ கண்டதோ துன்பம்
இனி வாழ்வெல்லாம் இன்பம்
சுக ராகமே அரம்பம்
நதியிலே புது புனல்
கடலிலே கலந்தது
நம் சொந்தமே
இன்று இணைந்தது
இன்பம் பிறந்தது
உறவுகள் தொடர்கதை
உணர்வுகள் சிறுகதை
ஒரு கதை என்றும் முடியலாம்
முடிவிலும் ஒன்று தொடரலாம்
இனி எல்லாம் சுகமே
இனி எல்லாம் சுகமே
I'm SO in love.